Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
உங்கள் வீட்டில் பாசுமதி அரிசி மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான தட்டுக்கடை முட்டை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம்.
தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அதிகம் சிரமப்படாமல், அதே சமயம் ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசி மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான தட்டுக்கடை முட்டை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம்.

உங்களுக்கு தட்டுக்கடை முட்டை பிரியாணியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை முட்டை பிரியாணி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 3 (வேக வைத்தது)
* பாசுமதி அரிசி - 1 கப் (வேக வைத்தது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/2 கப்
* புதினா - 1/4 கப் (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொருட்கள்...
* பிரியாணி இலை - 1
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 3
* பட்டை - 1 சிறிய துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் முட்டைகளை நீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை வெந்ததும், அதன் ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, அரிசியை கழுவி, குக்கரில் போட்டு, அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசுமதி அரிசி சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த முட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும். பின் அதில் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு நன்கு கிளறி விட்டு, மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தட்டுக்கடை முட்டை பிரியாணி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications