Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Idli Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லிக்கு சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒருமுறை தண்ணி சட்னியை செய்து கொடுங்கள். இந்த தண்ணி சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1
* வேர்க்கடலை - 1 கையளவு
* பொட்டுக்கடலை - 1 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புளி - மிகச்சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கையளவு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கீறி சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கையளவு வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலையை
சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, சிறிய
துண்டு புளியை சேர்த்து நன்க வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் 1
கையளவு துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தண்ணி
சட்னிக்கு ஏற்ப நீரை சற்று அதிகமாக ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இறக்கி,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications