உப்புமாவை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Thakkali Upma Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? ஒருவேளை உப்புமா செய்தால், அதை வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை உப்புமாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி உப்புமா செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த உப்புமாவில் தக்காளியை சற்று அதிகமாக சேர்ப்பதால், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thakkali Upma How To Make a Tomato Upma Recipe

தேவையான பொருட்கள்:

* நெய் - 2 டீஸ்பூன்
* ரவை - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* பெருங்காயத் தூள் - சிறிது
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ரவையை சேர்த்து நன்கு நிறம் மாற வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பெருங்காயத் தூள், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளறி, நீர் ஓரளவு வற்றியதும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 18, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion