Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி உளுந்து சட்னி.. இந்த சட்னியை செஞ்சா வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Thakkali Ulunthu Chutney Recipe In Tamil: இட்லிக்கு உங்கள் வீட்டில் பெரும்பாலும் தக்காளி சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் தக்காளி சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் தக்காளி சட்னியை ட்ரை செய்யுங்கள்.
பொதுவாக தக்காளி சட்னியை பல விதத்தில் செய்யலாம். அதில் ஒன்று தான் உளுந்து சேர்த்து செய்யப்படும் தக்காளி சட்னி. இந்த தக்காளி உளுந்து சட்னி இட்லியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த சட்னியை செய்தால் வீட்டில் உள்ளோர் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 6-7 பல்
* கருப்பு உளுந்து - 4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சட்னிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த சட்னி சற்று
நீராக இருந்தால் நன்றாக இருக்கும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
உளுந்து சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
