Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
தக்காளி சாதத்தை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிரியாணி சுவையில் டக்கரா இருக்கும்...
Thakkali Sadam Recipe In Tamil: மழை நேரத்தில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக, அதுவும் பிரியாணி போன்ற உணவை சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவது நல்லதல்ல. ஆனால் அந்த பிரியாணிக்கு இணையான சுவையைக் கொண்டது தான் தக்காளி சாதம்.
பொதுவாக தக்காளி சாதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். சொல்லப்போனால் தக்காளி சாதத்தையே பிரியாணி சுவையில் செய்யலாம். உங்களுக்கு அப்படி அதிக மசாலா இல்லாமல் ஒரு சுவையான தக்காளி சாதத்தை செய்ய வேண்டுமா? அப்படியானால் மசாலா அரைத்து இந்த பக்குவத்தில் தக்காளி சாதத்தை செய்யுங்கள்.

உங்களுக்கு பிரியாணி சுவையில் தக்காளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரியாணி சுவையில் இருக்கும் தக்காளி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 1 கைப்பிடி
* இஞ்சி - 2 இன்ச்
* வரமிளகாய் - 10 (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
* காஷ்மீரி வரமிளகாய் - 2 (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* அன்னாசிப்பூ - 1
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 5 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன வெங்காயம் - 10 (தட்டியது)
* பெரிய தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* பொன்னி பச்சரிசி - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* முதலில் பொன்னி பச்சரிசியை நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி
சமைக்கும் முன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி
வரமிளகாய், புதினா, கொத்தமல்லி, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு,
கல்பாசி மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா
சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்துள்ள்ள அரிசியை சேர்த்து நன்கு 1 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் அரிசிக்கு 1 3/4 கப் தண்ணீர் என்ற வீதத்தில்,
உங்கள் வீட்டில் உள்ள கப்பில் அரிசியை அளந்து, அதற்கேற்ப நீரை ஊற்றி
கிளறி, 2 பச்சை மிளகாயை முழுமையாக சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில்
விட்டு, பின் குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான தக்காளி சாதம் தயார்.



Click it and Unblock the Notifications











