Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ஒருடைம் இந்த தக்காளி பூண்டு தொக்கு செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..
Thakkali Poondu Thokku Recipe In Tamil: தினமும் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து செய்ய போரடிக்கிறதா? ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடும்படியான ஒரு சைடு டிஷ்ஷை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், பூண்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
இப்படி தக்காளி பூண்டு தொக்கு செய்யும் போது, அதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சூடான சாதத்தெதுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இதில் பூண்டு அதிகம் சேர்ப்பதால், சத்தானதும் கூட. இந்த தொக்கை செய்த உடனே சாப்பிடுவதை விட, நன்கு குளிர்ந்த பின் அல்லது மறுநாள் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பூண்டு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 4
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை வெட்டி போட்டு, அத்துடன்
புளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே ஜாரில் 1 கையளவு பூண்டு பற்களை சேர்த்து, அதையும் நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் 10 பல் பூண்டு சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து, பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும். பின் 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து,
மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக 5-8 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* 8 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான தக்காளி பூண்டு தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications