Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
10 நிமிடத்தில் ருசியான தக்காளி குருமாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Thakkali Kurma Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று இட்லி, தோசைக்கு சட்னியை செய்யாமல், வீட்டில் தக்காளி அதிகம் இருந்தால், தக்காளியை குருமாவை செய்யுங்கள். சட்னி செய்வதற்கு தக்காளி குருமாவை செய்தால், 2 இட்லியை சாப்பிடுபவர்கள் 1 இட்லியை எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
முக்கியமாக இந்த தக்காளி குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை ட்ரை செய்யலாம். குறிப்பாக இந்த குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் -3
* இஞ்சி - சிறிய துண்டு
* தக்காளி - 6 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 4 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின்
குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காயைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே மிக்சர் ஜாரில் வதக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள
வெங்காய விழுதை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, பின் தேங்காய் விழுதையும்
சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு வேண்டுமானால் சேர்த்து, மூடி
வைத்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி
குருமா தயார்.
Image Courtesy: Rakskitchen



Click it and Unblock the Notifications