Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
2 கப் இட்லி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த டீக்கடை போண்டாவை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்..
Tea Kadai Sweet Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் அவர்களுக்கு காபி, டீ போடும் சமயத்தில் டக்கென்று ஒரு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா?
அப்படியானால் டீக்கடை இனிப்பு போண்டாவை செய்து கொடுங்கள். இந்த போண்டாவிற்கு 2 கப் இட்லி மாவு இருந்தால் அருமையான சுவையில் செய்யலாம். இந்த போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையிலும் இருக்கும்.

உங்களுக்கு டீக்கடை இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 2 கப்
* சர்க்கரை - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 கப் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் அரிசி மாவு, 1 கப் கோதுமை மாவு சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து பிசைந்த மாவை கைகளால் மீண்டும் நன்கு பிசைய
வேண்டும்.
* மாவு சரியான பதத்தில் உள்ளதா என்பதை அறிய, கைகளை நீரில் நனைத்து,
சிறிது மாவை எடுத்து உருட்டி போட்டால், சரியாக வர வேண்டும். அப்படி
வந்தால், மாவு சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
டீக்கடை இனிப்பு போண்டா தயார்.



Click it and Unblock the Notifications
