Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சப்பாத்திக்கு பன்னீரை வைச்சு இந்த தாபா ஸ்டைல் கிரேவி செய்யுங்க... எல்லாரும் 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க!
Tawa Paneer Gravy Recipe in Tamil: இட்லி, தோசைக்கு அடுத்தபடியாக பெரும்பாலான வீடுகளில் இரவு உணவாக இருப்பது சப்பாத்திதான். சப்பாத்தி எளிதான மற்றும் சுவையான உணவாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி இருக்கிறது.
பொதுவாக சப்பாத்திக்கு பிரதான சைடிஷாக இருப்பது உருளைக்கிழங்கு குருமாவும், தக்காளி தொக்கும்தான். நீங்கள் சப்பாத்தி செய்யப்போகிறீர்கள் என்றால் ஆனால் அதற்கு வித்தியாசமான அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு பன்னீரை வைத்துதான் சைடிஷ் செய்ய வேண்டும்.

சைவ உணவு உண்பவர்களின் பிரதான உணவாக இருப்பது பன்னீர்தான். பன்னீரை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான கால்சியம், புரோட்டீன் போன்றவற்றைப் பெறலாம். தாபாக்களில் சப்பாத்திக்கு பரிமாறப்படும் பன்னீர் கிரேவி எப்போதுமீ தனித்துவமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். இந்த பதிவில் அந்த சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- ¼ கப் தயிர்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ¼ ஸ்பூன் கரம் மசாலா
- ¼ ஸ்பூன் சீரகப் பொடி
- ½ ஸ்பூன் கசூரி மேத்தி
- ½ ஸ்பூன் உப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 பாக்கெட் நறுக்கிய பன்னீர்
கிரேவி செய்ய:
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
- 1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் சீரக தூள்
- ½ டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
- 2 தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
- ½ கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி
- ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
செய்முறை:
- முதலில், ஒரு பாத்திரத்தில் ¼ கப் தயிர், ¼ ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் கரம் மசாலா, ¼ ஸ்பூன் சீரகப் பொடி, ½ ஸ்பூன் கசூரி மேத்தி, ½ ஸ்பூன் உப்பு மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.
- அனைத்தையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இதில் நறுக்கிய பன்னீரை சேர்த்து, மாரினேட் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, ½ ஸ்பூன் சீரகத்தைத் தூவவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து ½ ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் சீரகத்தூள், ½ ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் 2 நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து, அது மொறுமொறுப்பாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் மேரினேட் செய்யப்பட்ட பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் ½ கப் தண்ணீர், ½ ஸ்பூன் உப்பு சேர்த்து, தேவைக்கேற்ப பதத்திற்கு கொண்டுவரவும்.
- இதை மூடி வைத்து 5 நிமிடங்கள் அல்லது கறி நன்றாக வேகும் வரை வேக வைக்கவும்.
- இறுதியாக 2 ஸ்பூன் கசூரி மேத்தி, ½ ஸ்பூன் கரம் மசாலா, மற்றும் 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மெதுவாக கலக்கவும்.
- சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் ரெடி. இது சூடான சப்பாத்தி மற்றும் பன்னீருடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications