Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும்
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி - இப்படி செய்யுங்க 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்!
Tamil New Year Special Manga Pachadi Recipe In Tamil: தமிழ் புத்தாண்டான பராபவ வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு நாளில் பல்வேறு வழக்கங்கள் தமிழ்நாட்டு மக்களால் பின்பற்றப்படுவதுண்டு. குறிப்பாக உணவை எடுத்துக் கொண்டால், இந்த புத்தாண்டு பிறக்கும் காலத்தில் மாங்காய் விளைச்சல் அதிகம் இருப்பதனால், அந்த மாங்காயைக் கொண்டு அறுசுவையும் கலந்து இருக்குமாறான ஒரு அட்டகாசமான இனிப்பு மாங்காய் பச்சடியை செய்வார்கள்.
இந்த மாங்காய் பச்சடியை ஒவ்வொருவரும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு விதத்தில் செய்யலாம். நீங்கள் இந்த புத்தாண்டிற்கு ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் ருசியாக இருக்கும்படியான மாங்காய் பச்சடியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் மாங்காய் பச்சடியை செய்யுங்கள்.

இந்த இனிப்பு மாங்காய் பச்சடி குறித்து கவிதா சமையலறை என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அந்த இனிப்பு மாங்காய் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாங்காய் - 2
* பொடித்த வெல்லம் - 200 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, மெல்லிய சிறிய நீளத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த வெல்லத்தை
சேர்த்து, 1 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும். வெல்லம் கரைந்த பின் அதை இறக்கி குளிர வைத்து, அதை வடிகட்டி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மீண்டும் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி
வைத்துள்ள மாங்காயை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சில
நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூளை சேர்த்து கிளறி, கரைத்து வைத்துள்ள
வெல்ல பாகை சேர்த்து கிளறி, மூடி வைத்து நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பச்சடி சற்று கெட்டியாகத் தொடங்கியதும், மூடியைத் திறந்து,
கெட்டியாகும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* மாங்காய் பச்சடி கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி குளிர
வைத்தால், சுவையான மாங்காய் பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications
