Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்
காலையில் ராகி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அத்தகைய ராகியை கூழ் அல்லது கஞ்சி போன்று செய்து சாப்பிடலாம். பலரும் கடையில் விற்கப்படும் ராகி மாவு கொண்டு தான் கூழ் செய்து குடிப்பார்கள். ஆனால் ராகியை வாங்கி ஊற வைத்து அரைத்து பால் எடுத்து கூழ் செய்து குடித்தால், அதன் சுவையே அலாதி தான்.
இங்கு அப்படி ராகியை ஊற வைத்து பால் எடுத்து எப்படி கூழ் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 1/4 டீஸ்பூன்
வெல்லப்பாகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ராகியை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மறுநாள் காலையில் மீண்டும் ராகியைக் கழுவி, மிக்ஸியில் போட்டு 2-3 முறை அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் துணியை விரித்து, அத்துணியில் அரைத்த ராகியை ஊற்றி நன்கு பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால், அரைத்த ராகியை இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளலாம்.
பின்பு ஒரு வாணலியில் அந்த பாலை ஊற்றி, பால் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கரண்டி கொண்டு நன்கு கட்டிகள் சேராதவாறு கிளறி விட வேண்டும்.
ஒரு கட்டத்தில் அந்த பால் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது நெய் மற்றும் சர்க்கரை பாகு சேர்த்து நெருப்பை குறைத்து, மீண்டும் நன்கு கிளறி விட்டு இறக்கி பரிமாறினால், ராகி கூழ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
