Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மாம்பழ பாயாசம்
மாம்பழ சீசன் என்பதால் மார்கெட்டில் மாம்பழம் விலைக் குறைவாக கிடைக்கும். அப்படி விலைக்குறைவில் கிடைக்கும் மாம்பழங்களை அப்படியே ருசிப்பதைத் தவிர்த்து, இன்று சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு பாயாசம் செய்து சுவைத்துப் பாருங்கள்.
இங்கு மாம்பழத்தைக் கொண்டு பாயாசம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 டீஸ்பூன்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழ கூழ் - 1/2 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
மாம்பழம் - சிறிது
ஏலக்காய் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அதனுள் அந்த பால் பாத்திரத்தை வைத்து, அத்துடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி, பின் குக்கரை மூடி 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
பின் அதனை ஒரு அகன்ற கடாயில் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, மேலே முந்திரியையும், சிறிது மாம்பழத் துண்டுகளையும் தூவினால், மாம்பழ பாயாசம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications