Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
வீட்டுல சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஒருடைம் இந்த அல்வா செஞ்சு பாருங்க.. டேஸ்ட் லேற லெவல்-ல இருக்கும்..
Sweet Potato Halwa Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்வீட் என்றால் பிடிக்குமா? அடிக்கடி உங்கள் வீட்டில் ஸ்வீட் செய்வீர்களா? அதுவும் அல்வாவை அடிக்கடி வீட்டில் மாலை வேளையில் செய்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளதா?
ஆனால் யாரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கொண்டு அல்வா செய்யுங்கள். இந்த அல்வா மிகவும் மென்மையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 300 கிராம்
* தண்ணீர் - 3-4 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 3/4 கப் (பொடித்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* நெய் - 5 டேபிள் ஸ்பூன்
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - சிறிது
* முந்திரி - 10
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் கழுவி, அதை இரண்டாக
வெட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கி மிக்சர்
ஜாரில் போட்டு, 3-4 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம்
கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* அதன் பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை உடைத்து சேர்த்து பொன்னிறமாக
வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், கோதுமை மாவை சேர்த்து நல்ல மணம் வரும் வரை கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை விழுதை
சேர்த்து, அத்துடன் வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் ஏலக்காய் தூள் மற்றும்
வறுத்து வைத்துள்ள முந்திரியை நெய்யுடன் அப்படியே சேர்த்து நன்கு
கிளறி இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications
