Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
இந்த கிழங்கை இந்த மாதிரி சட்னி அரைச்சு இட்லி, தோசையோட வைச்சு சாப்பிடுங்க..சருமம் ஜொலிக்கும், முடியும் வளரும்!
Sweet Potato Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சாப்பிட்டி போரடிக்குதா? இந்த இட்லி, தோசைக்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமான, அதே சமயம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய சத்தான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா?அப்படியானால் அந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இதில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரை வள்ளிக்கிழங்கு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 சிறிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 2 வர மிளகாய்
- 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 டீஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் கழுவி தோலுரித்து சுத்தம் செய்யவும். பின்னர் அதைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வர மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- பருப்பு லேசாக பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதில் ஒரு பெரிய சிட்டிகை பெருங்காயத்தூளைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். நீங்கள் பச்சையான சர்க்கரைவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தலாம் அல்லது அதை சிறிது நேரம் வறுத்தும் பயன்படுத்தலாம்.
- பின்னர் துருவிய தேங்காயைச் சேர்த்து, விரைவாகக் கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
- பின்னர் உப்பு, புளி மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
- இதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- பின்னர் கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- வர மிளகாயி நிறம் மாறியதும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கி இதை சட்னி மீது கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான்கர்நாடகா பேமஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சட்னி ரெடி. இது சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட இது அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
