Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் அரிசி மாவு வெச்சு.. ஈவ்னிங் 5 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Sweet Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, போண்டா என்று செய்து கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் அரிசி மாவு இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் கொழுக்கட்டையை செய்து கொடுங்கள். இந்த கொழுக்கட்டை பால் சேர்த்து செய்வதால், சுவை அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த ஸ்வீட் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
* பால் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* பச்சரிசி மாவு - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி உருகியதும், பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் முந்திரியை
சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் பால் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் 1/4
டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்ததும், அதில் பச்சரிசி மாவை சேர்த்து நன்கு
திரண்டு வரும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* மாவானது வாணலியில் ஒட்டாமல் நன்கு வெந்து திரண்டு வந்ததும், அடுப்பை
அணைத்து விட்டு குளிர வைக்க வேண்டும்.
* மாவானது கை பொறுக்கும் சூட்டிற்கு குளிர்ந்து வந்ததும், அதை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து கொழுக்கட்டை போன்று நீள துண்டுகளாக உருட்டி
பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி,
நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை உள்ளே வைத்து, பின்
மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான இனிப்பு
கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications