Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஸ்வீட் கார்ன் பக்கோடா
ஸ்வீட் கார்னைக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறான ஒரு அட்டகாசமான ரெசிபியை செய்யலாம் என்பது தெரியுமா? அது தான் ஸ்வீட் கார்ன் பக்கோடா.
பொதுவாக குழந்தைகள் ஸ்வீட் கார்ன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த ஸ்வீட் கார்னை நீங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வேக வைத்து தான் சாப்பிடக் கொடுப்பீர்கள். ஆனால் ஸ்வீட் கார்னைக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறான ஒரு அட்டகாசமான ரெசிபியை செய்யலாம் என்பது தெரியுமா? அது தான் ஸ்வீட் கார்ன் பக்கோடா. குறிப்பாக இது மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சுவைக்க ஏற்றது.

கீழே ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 2 கப் (வேக வைத்தது)
* வெங்காயம் - 1/2 (மெல்லியதாக நறுக்கியது)
* கடலை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீபூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீபூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்
* சாட் மசாலா - 1/4 டீபூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - 1/4 டீபூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வேக வைத்த கார்ன் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ளலாம்.
* பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பிசையும் போது, தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா தயார்.
Image Courtesy: Indianhealthyrecipes



Click it and Unblock the Notifications
