Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
செஃப் தீனாவின் பச்சை சுண்டக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Chef Deena's Pachai Sundakkai Kuzhambu Recipe In Tamil: உடல் ஆரோக்கியத்திற்காக வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்க்க வேண்டிய குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சுண்டக்காய். அதுவும் பச்சை சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் போது, செரிமானம் மேம்படும், குடல் புழுக்கள் வெளியேற்றப்படும், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், இரத்த சர்க்கரை சீராகும் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட பச்சை சுண்டக்காயை குழம்பு வைத்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். அதுவும் இந்த குழம்பானது மீன் குழம்பைப் போல் மறுநாள் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யும் போது, கசப்பும் தெரியாது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பச்சை சுண்டக்காய் குழம்பு குறித்து பிரபல செஃப் தீனா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு பச்சை சுண்டக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை சுண்டக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை சுண்டக்காய் - 150 கிராம்
* சின்ன வெங்காயம் - 20-25 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 15-20
* குழம்பு தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுண்டக்காயில் உள்ள காம்புகளை நீக்கிவிட்டு, சுண்டக்காயை
நசுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு,
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுண்டக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, மூடி வைத்து பச்சை
வாசனை போக மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத் தூள்,
நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான பச்சை சுண்டக்காய்
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications