Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சம்மர் ஸ்பெஷல்: கிர்னி பழ சர்பத்
கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், அனல் காற்றின் காரணமாக பலரும் கடுமையான தாகத்தை உணர்வோம். குறிப்பாக மதிய உணவிற்கு பின் பலரும் ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க விரும்புவோம். உங்கள் வீட்டில் உள்ளோரும் மதிய வேளையில் குளிர்ச்சியாக குடிக்க ஏதாவது கேட்டால், கிர்னி பழ சர்பத் செய்து கொடுங்கள்.
கோடைக்காலத்தில் கிர்னி பழம்/முலாம் பழ சீசன் என்பதால், இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அவற்றைக் கொண்டு ஜூஸ் அல்லது சர்பத் செய்து குடிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியடைவதோடு, கோடைக்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த சர்பத் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கிர்னி பழ சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிர்னி பழ சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முலாம்பழம்/கிர்னி பழம் - 1
* சர்பத் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கிர்னி பழத்தை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்க
வேண்டும்.
* பின் அதில் உள்ள சதை பகுதியை ஸ்பூன் கொண்டு எடுத்து, ஒரு
பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஸ்பூனால் அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு ஐஸ் நீரை சேர்த்து கலந்தால், சுவையான
கிர்னி பழ சர்பத் தயார்.
குறிப்பு:
* இந்த சர்பத்தில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சர்பத்திலேயே தேவையான அளவு இனிப்பு இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications