Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா?
Chef Madhampatty Rangaraj's Style Masala Buttermilk Soda Recipe: கோடை வெயில் கொளுத்தும் போது, உடலுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் மோர் குடித்தால் நன்றாக இருக்கும். அதுவும் இப்படி கொளுத்தும் வெயில் நேரத்தில் மோர் குடிக்கும் போது, பல நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, உடலும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த மோரை எப்போதும் வெறுமனே குடிப்பதற்கு பதிலாக, அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை அரைத்து சேர்த்து குடித்தால் இன்னும் ருசியாக இருக்கும். அதோடு இப்படி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் எக்ஸ்ட்ரா ஒரு டம்ளர் மோரை குடிக்கவும் செய்வார்கள்.

ஆனால் இதை விட, பிரபல செஃப்பான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு கோடைக்கு ஏற்ற அற்புதமான மசாலா மோர் சோடா ரெசிபியை பகிர்ந்துள்ளார். இந்த மசாலா மோர் சோடா கேரளாவில் பிரபலமானது. இதை வயிறு நிறைய உண்ட பின் குடிக்கும் போது செரிமானம் சிறப்பாக இருக்கும். மேலும் கோடை வெயிலுக்கு உடலுக்கு இதமாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த மசாலா மோர் சோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா மோர் சோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மலை நெல்லிக்காய் - 2
* கோ மாங்காய் - 4 நீளத் துண்டுகள்
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி - சிறிய துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1/2 லிட்டர்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஐஸ் கட்டிகள் - சிறிது
* சோடா - சிறிது
செய்முறை:
* முதலில் மலை நெல்லிக்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் கோ மாங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய மலை நெல்லிக்காய், மாங்காய், 1
பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து பெரிய மிக்சர் ஜாரில் அரைத்த விழுதை எடுத்துக் கொண்டு,
அத்துடன் 1/2 லிட்டர் தயிரை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூளையும்
சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு டம்ளரில் அரைத்த மோரை பாதி ஊற்றி, அதில் சிறிது ஐஸ்
துண்டுகளை சேர்த்து, சிறிது சோடாவை சேர்த்து கலந்தால், சுவையான மசாலா
மோர் சோடா தயார்.



Click it and Unblock the Notifications
