Latest Updates
-
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்! -
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்?
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Summer Special Raw Mango Peanut Chutney Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மாங்காய் சீசனும் தொடங்கிவிட்டது. இந்த மாங்காய் சீசனில் விலைக் குறைவில் மாங்காய் கிடைப்பதால், கோடை காலம் முழுவதும் பலரது வீடுகளின் தினமும் ஏதாவது ஒரு வகையில் மாங்காயை எடுப்பார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி மாங்காயை அதிகம் சாப்பிடுவீர்களா?
பொதுவாக மாங்காயை கொண்டு சாம்பார், ரசம், ஜாம், பச்சடி, குல்பி என்று பலவாறு சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் அதே மாங்காயை கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் வேர்க்கடலையுட சேர்த்து மாங்காயை சட்நி செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை மாங்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மாங்காய் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* உருட்டு உளுந்து - 3 ஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
* இஞ்சி - 3 துண்டு
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 15
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* மூக்கு மாங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உருட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய இஞ்சி, வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
அதிகம் நீர் ஊற்றாமல் அளவாக நீரை ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான பச்ச
மாங்காய் வேர்க்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
