Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
குழந்தைகளுக்கான.. சத்தான... பசலைக்கீரை கொழுக்கட்டை
Spinach Dumplings Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் உள்ளார்களா? அவர்கள் காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிடமாட்டார்களா? மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா?
அப்படியானால் அவர்களுக்கு பசலைக்கீரை கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த கொழுக்கட்டை மிகவும் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும்.

பசலைக்கீரை கொழுக்கட்டை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு பசலைக்கீரை கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பசலைக்கீரை கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டீஸ்பூன்
* பசலைக்கீரை - 2 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2-3 டேபிள் ஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, கடலை மாவு, கோதுமை மாவு, மஞ்சள்
தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை, சீரகம் சேர்த்து
கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு கையில் எண்ணெயைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை
கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி 8-10
நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி பாத்திரத்தைத் திறந்து,
கொழுக்கட்டைகளை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
இந்த கொழுக்கட்டைகளைப் போட்டு 2 நிமிடம் மொறுமொறுப்பாகும் வரை ப்ரை
செய்து, மேலே எள்ளு விதைகளைத் தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான
பசலைக்கீரை கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications










