Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
காரசாரமான பன்னீர் மசாலா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Spicy Paneer Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு பன்னீர் சைடு டிஷ் அதிகமாக செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் பன்னீர் சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை காரசாரமான பன்னீர் மசாலாவை செய்யுங்கள்.
இந்த பன்னீர் மசாலா ஹோட்டல்களில் கொடுக்கப்படுவது போன்று அசத்தலான சுவையில் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இந்த பன்னீர் மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, புலாவ், நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காரசாரமான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
அரைப்பதற்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்
தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து புளிப்பில்லாத தயிரை சேர்த்து கிளறி விட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த பொடியை மசாலாவுடன் சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான காரசாரமான பன்னீர் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications