Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
சுவையான... காளான் மசாலா
சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள்.
இரவு வேளையில் சப்பாத்தி செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள். காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம், பூரி போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும்.

சைவ பிரியர்களுக்கு அசைவ உணவின் சுவையைக் கொடுக்கும் ஓர் உணவுப் பொருள் என்றால் அது காளான் தான். இத்தகைய காளானில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. உங்களுக்கு காளான் மசாலா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது. ஏனென்றால், கீழே காளான் மசாலாவின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, அதன் சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* அதே சமயம் ஒரு பௌலில் மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாணலியில் உள்ள கலவையில் இருந்து பச்சை வாசனை முற்றிலும் போனதும், நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து, உப்பு தூவி கிளறி விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5-10 நிமிடம் காளானை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும் காரமான காளான் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
