Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
கொங்குநாடு ஸ்டைல் ஆட்டுக்கறி குருமா
நீங்கள் மட்டன் பிரியரா? மட்டனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புபவரா? உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் கொங்குநாடு ஸ்டைல் ஆட்டுக்கறி குருமாவை உங்கள் வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள்.
நீங்கள் மட்டன் பிரியரா? மட்டனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புபவரா? உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் கொங்குநாடு ஸ்டைல் ஆட்டுக்கறி குருமாவை உங்கள் வீட்டிலேயே வார விடுமுறை நாட்களில் முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு கொங்குநாடு மட்டன் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஆட்டுக்கறி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கறி/மட்டன் - 500 கிராம்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 12 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* கறிவேப்பிலை - சிறிது
* சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* பூண்டு - 3 பல்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச் துண்டு
* வரமிளகாய் - 3
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3/4 கப் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை குறைவான தீயில் 5-7 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகாய் தூளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* நீங்கள் குக்கரில் சமைப்பதானால், அனைத்தையும் குக்கரில் போட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா தயார்.



Click it and Unblock the Notifications
