Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா
சப்பாத்திக்கு ஒரு நல்ல ருசியான சைடு டிஷ் செய்ய நினைத்தால், மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.
விடுமுறை நாட்களில் நல்ல சுவையான சமையலை சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் அசைவம் சாப்பிட முடியாத நிலையில் சைவ உணவுகளை நன்கு சுவையாக சமைத்து சாப்பிட நினைப்போம். அப்படிப்பட்ட நாட்களில் சப்பாத்திக்கு ஒரு நல்ல ருசியான சைடு டிஷ் செய்ய நினைத்தால், மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 3 கப் (வேக வைத்தது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
* பட்டாணி - 1 கப்
* தேங்காய் - 1 கப் (அரைத்தது)
* பால் - 1/2 கப்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
பொடிகள்...
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீர் மற்றும் சிறிது பாலை ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் மீல் மேக்கரைப் போட்டு அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அந்த மீல் மேக்கரில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 1/2 கப் பாலில் சோள மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு, சர்க்கரை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 5 நிமிடம் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகளை சேர்த்து 30 நொடிகள் கிளற வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* இப்போது, பட்டாணி, குடைமிளகாய், பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் வேக வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மூடி வைத்து 15 நிமிடம் பட்டாணி மற்றும் பீன்ஸ் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் சோள மாவு பாலை ஊற்றி கிளறி, குருமா சற்று கெட்டியாக ஆரம்பித்ததும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

