Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மினி பிட்சா ரெசிபி
இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. அதற்காக அடிக்கடி பிட்சா கடைக்கு செல்ல முடியாது. ஆனால் வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால், பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். மேலும் இந்த பிட்சா செய்வதற்கு எந்த கஷ்டமும் படத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களே போதுமானது.
இன்று உங்கள் மைக்ரோ ஓவனுக்கு வேலை தரும் விதமாக, தமிழ் போல்ட் ஸ்கை மினி பிட்சாவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
டாப்பிங்ஸ்...
பிட்சா சாஸ் - 1/4 கப்
காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
சீஸ் - 1/2 கப் (துருவியது)
சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
ஓரிகானோ - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, எண்ணெயுடன் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான மினி பிட்சா ரெடி! இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications