Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
பாசிப்பருப்பு வடை
பொதுவாக கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கொண்டு தான் வடை செய்வார்கள். ஆனால் பாசிப்பருப்பு கொண்டும் வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், பாசிப்பருப்பைக் கொண்டு கூட அருமையான சுவையில் வடை செய்யலாம்.
இந்த வடை செய்வது மிகவும் ஈஸி. மாலை வேளையில் செய்து டீயுடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 5
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு வடை ரெடி!!!



Click it and Unblock the Notifications
