Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்களுக்கு சாம்பார் வைக்கவே வராதா? இப்படி சாம்பார் செஞ்சு பாருங்க.. வீட்டுல எல்லாம் அசந்து போவாங்க...
Traditional Chinna Vengaya Sambar Recipe In Tamil: தென்னிந்திய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சாதம், சாம்பார், ரசம் தான். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு அந்த சாம்பாரை சரியாக செய்ய தெரியாது. உங்கள் கதியும் அது தானா? அப்படியானால் காய்கறிகளை அதிகம் சேர்க்காமல் சிம்பிளாக சின்ன வெங்காயம் கொண்டு சாம்பாரை ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.
இப்படி சாம்பார் வைக்கும் போது, அந்த சாம்பாரை வீட்டில் உள்ளோர் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். மேலும் சின்ன வெங்காய சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு சின்ன வெங்காய சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப் அல்லது 200 கிராம்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* விளக்கெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
சாம்பாருக்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை 2 முறை நீரில் நன்கு கழுவி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்,
விளக்கெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின்
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சாம்பார் தூளை சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து
கிளறி, வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கலந்து, மிகவும் கெட்டியாக
இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, பின் புளிச்சாற்றினை ஊற்றி,
உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும்
மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சின்ன
வெங்காய சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
