Latest Updates
-
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?
சன்டே ஸ்பெஷல்: சிவகாசி ஸ்டைல் மட்டன் கறி குழம்பு
இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்திருப்பீர்கள். ஆனால் சிவகாசி ஸ்டைல் மட்டன் கறி குழம்பு செய்ததுண்டா? இந்த சிவகாசி ஸ்டைல் மட்டன் குழம்பு சற்று வித்தியாசமான செய்முறையை கொண்டது.
இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்திருப்பீர்கள். ஆனால் சிவகாசி ஸ்டைல் மட்டன் கறி குழம்பு செய்ததுண்டா? இந்த சிவகாசி ஸ்டைல் மட்டன் குழம்பு சற்று வித்தியாசமான செய்முறையை கொண்டது மற்றும் வித்தியாசமான சுவையைக் கொண்டது. இது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சிவகாசி ஸ்டைல் மட்டன் கறி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவகாசி ஸ்டைல் மட்டன் கறி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* வரமிளகாய் - 13
* சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன் + 1/2 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1/2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5-6
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3/4 கப் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் மீண்டும் மட்டனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு கசகசாவை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வறுத்த பொருட்களைப் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 3/4 கப் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பை தூவி நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, மட்டனை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் 5-6 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மசாலாவை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 5-7 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிவகாசி ஸ்டைல் மட்டன் கறி குழம்பு தயார்.
Image Courtesy: jingalala



Click it and Unblock the Notifications