Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வெங்காயம், பூண்டு, தேங்காய்-ன்னு எதுவும் சேர்க்காமலே கார சட்னி செய்யலாம்.. எப்படி செய்றது-ன்னு பாருங்களேன்...
No Onion No Garlic No Coconut Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய வெங்காயம், பூண்டு, தேங்காய்-ன்னு எதுவுமே இல்லையா? கவலைப்படாதீர்கள். இந்த பொருட்கள் எதுவும் இல்லாமலேயே அருமையான சுவையில் ஒரு சட்னியை செய்யலாம். அது தான் தக்காளி கார சட்னி.
இந்த சட்னிக்கு தக்காளியும், வரமிளகாயும் இருந்தால் போதும். 10 நிமிடத்தில் சட்னியை செய்துவிடலாம். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசை, கோதுமை தோசை என அனைத்துடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். ஆபீஸ் செல்பவர்களுக்கு காலையில் டக்கென்று செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து
லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர்ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
