Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
1 கப் அவல் இருக்கா? அப்ப காலையில இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க...
Milagu Aval Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு மிளகு அவலை செய்யுங்கள்.
இந்த மிளகு அவல் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக இருப்பதோடு, சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், சளியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இந்த மிளகு அவல் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியான செய்முறையைக் கொண்டது. சொல்லப்போனால் வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபியும் கூட.

உங்களுக்கு மிளகு அவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு அவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* மிளகு - 1 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அவலை நீரில் நன்கு கழுவி, 5 நிமிடம் நீரில் ஊற வைக்க
வேண்டும். பின் அவலில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து
எடுத்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய்,
வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த பொடியை சேர்த்து கிளறி, அவலை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரைத் தெளித்து, மூடி வைத்து மிதமான
தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான மிளகு அவல் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
