Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
இட்லிக்கு 10 நிமிஷத்துல சட்னி செய்யணுமா? பூண்டு இருந்தா இப்படி சட்னி செய்யுங்க...
Poondu chutney Recipe In Tamil: தமிழ்நாட்டில் பெரும்பாலானோரது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை தான் இருக்கும். உங்கள் வீட்டிலும் இன்று காலை இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பூண்டு அதிகமாக உள்ளதா?அப்படியானால் பூண்டு சட்னியை செய்யுங்கள்.
பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக கொலஸ்ட்ராலைக் குறைக்க, பிபியைக் குறைக்க, ஏன் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அடிக்கடி உணவில் பூண்டு சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதுவும் பூண்டு சட்னியை செய்து சாப்பிட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு சட்னியை எப்படி செய்தென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 8
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பூண்டு - 18 பல்
* சின்ன வெங்காயம் - 3 (நறுக்கியது)
* புளி - 1 சிறிதளவு
* உப்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வரமிளகாயைப் போட்டு, அதில் 1 கப் சுடுநீரை
ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அந்த பூண்டுடன், வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* வெங்காயம் நன்கு நிறம் மாறியதும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் புளி,
சுவைக்கேற்ப உப்பு, ஊற வைத்த வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications