Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மொறுமொறுப்பான... இறால் வடை
இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய வடை செய்யலாம் என்பது தெரியுமா?
விடுமுறை நாட்களில் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புபவரா? குறிப்பாக உங்களுக்கு இறால் பிடிக்குமா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது. இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இறால் வடையை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் போது, இறால் வடை செய்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு இறால் வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இறால் - 1/4 கிலோ
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 6
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
பிற பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின் சுத்தம் செய்த இறாலை பிளெண்டரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பிற பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இறால் வடை தயார்.
குறிப்பு:
* தேங்காய் எண்ணெயில் பொரித்தால், வடை இன்னும் சூப்பராக இருக்கும்.
* வடையை பொரிக்கும் போது, எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை சேர்த்துக் கொண்டால், நல்ல ஃப்ளேவர் கிடைக்கும்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications