Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
1 பச்சரிசி வெச்சு.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. மொறுமொறுன்னு செம சூப்பரா இருக்கும்...
Sel Roti Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சரிசி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு பாரம்பரிய நேபாள ஸ்நாக்ஸை செய்து கொடுங்கள். இதன் பெயர் செல் ரொட்டி.
இந்த செல் ரொட்டி அளவான இனிப்புடன், மொறுமொறுவென்று இருக்கும். முக்கியமாக இதன் வடிவம் வளையம் போன்று இருப்பதால், பார்த்ததும் சாப்பிட தோன்றும். ஒருமுறை குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு செல் ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செல் ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
சுத்தமான நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, பச்சரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 4
டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, 2
டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவின் பதம் என்றால், கரண்டியில் எடுத்து மாவை ஊற்றும் போது, அது
மிகவும் இறுக்கமாக இல்லாமல், எளிதில் விழ வேண்டும்.
* ஒருவேளை மாவு கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள். உடனே சுடுவதாக இருந்தால், அத்துடன் 1 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆப்பசோடா சேர்க்க விருப்பம்
இல்லாவிட்டால், 2 மணிநேரம் ஊற வைத்து பின் சுட வேண்டும்.
* இறுதியாக ஒரு தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து, வளையம் போன்று ஊற்றிக்
கொண்டு, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
செல் ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications