Just In
- 3 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 4 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 5 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- News
12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவையான... சீசுவான் தோசை
பொதுவாக நாம் கடைகளில் சீசுவான் ஃப்ரைடு ரைஸ் வாங்கி சாப்பிட்டிருப்போம். இது சைனீஸ் ரெசிபிக்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்றும் கூட. இந்த ஃப்ரைடு ரைஸ் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் சீசுவான் சாஸ் தான். ஆனால் இந்த சீசுவான் சாஸ் கொண்டு ஒரு அற்புதமான தோசை செய்யலாம் என்பது தெரியுமா? அதன் பெயர் தான் சீசுவான் தோசை.
இந்த தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் ருசியாக இருக்கும். குறிப்பாக இது காலையில் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் சாப்பிட ஏற்றது. இப்போது சீசுவான் தோசையை எப்படி செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - 2 கப்
* வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
* கேரட் - 1/4 கப் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
* குடைமிளகாய் - 1/4 கப் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
* முட்டைக்கோஸ் - 1/2 கப் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் - 2 டேபிள் ஸ்பூன் (பச்சை பகுதி)
* ஸ்பிரிங் ஆனியன் - 2 ஸ்பூன் (வெள்ளைப் பகுதி)
* சீசுவான் சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதி மற்றும் பூண்டுகளை சேர்த்து வதக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதைத் தொடர்ந்து கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து, அது சுருங்கி, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* அதன் பின் 2 டீஸ்பூன் சீசுவான் சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
* இறுதியில் ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் தோசை மாவு கொண்டு தோசை ஊற்றவும்.
* பின் அதன் மேல் சிறிது வெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் சீசுவான் சாஸ் வைத்து, ஒரு ஸ்பூன் கொண்டு மேலே பரப்பி விட வேண்டும்.
* தோசையானது வெந்ததும், அதன் ஒரு ஓரத்தில் சிறிது வதக்கிய காய்கறிகளை வைத்து ரோல் போன்று சுருட்டினால், சுவையான சீசுவான் தோசை தயார்.