Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கல்யாண வீட்டு சாம்பார் சாதம்.. ஈஸியா குக்கர்-ல செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Kalyana Veetu Sambar Sadam Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், சமையலறையில் நீண்ட நேரம் நின்று சமைக்க பிடிக்காது. அப்படியான நேரத்தில் சட்டென்று சமையலை முடிக்கவே பலரும் நினைப்பார்கள். நீங்களும் அப்படி தான் நினைக்கிறீர்களா?
அப்படியானால் கல்யாண வீட்டு சாம்பார் சாதத்தை செய்யுங்கள். இந்த சாம்பார் சாதம் ருசியாக இருக்க கடைசியாக ஒரு பொடி அரைத்து சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது, அதன் சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இப்படி சாம்பார் சாதம் செய்தால், வாரம் ஒருமுறை நிச்சயம் வீட்டில் செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு கல்யாண வீட்டு சாம்பார் சாதத்தை எப்படி குக்கரில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சாம்பார் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப் + 1 1/2 கப்
* மஞ்சள் பூசணி - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* அவரைக்காய் - 10 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெள்ளைப்பூசணி - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - பாதி (துண்டுகளாக்கப்பட்டது)
* சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பெரிய கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (சிறிது நீரில் ஊற வைத்தது)
* அரைத்த சாம்பார் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி வறுத்து பொடிப்பதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 10
* வரமிளகாய் - 3
* காஷ்மீரி மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரை எடுத்து, அதில் அரிசி மற்றும் துவரம் பருப்பை
சேர்த்து நீரில் 2 முறை கழுவ வேண்டும்.
* பின் அதில் 5 1/2 கப் நீரை ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளான
மஞ்சள் பூசணி, கேரட், அவரைக்காய், வெள்ளைப்பூசணி, பீன்ஸ்,
குடைமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய், தக்காளி
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு,
சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து
5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், மிளகு, வரமிளகாய், காஷ்மீரி
வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின், மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து கிளறி, மீண்டும்
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் புளி நீர் மற்றும் அரைத்த சாம்பார்
பொடியை 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* சாதம் நன்கு வெந்து, சற்று குலைந்ததும், மற்றொரு அடுப்பில் வாணலியை
வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி, சாம்பார் சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால்,
சுவையான கல்யாண வீட்டு சாம்பார் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications