Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சம்பல் சிக்கன்
சிக்கனைக் கொண்டு பல வகையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் சம்பல் சிக்கன். அதென்ன சம்பல் சிக்கன் என்று நீங்கள் கேட்கலாம். இந்த சம்பல் சிக்கன் ஒரு பிரபலமான மலேசியன் ரெசிபி.
அசைவ உணவில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சிக்கன் தான். இந்த சிக்கனைக் கொண்டு பல வகையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் சம்பல் சிக்கன். அதென்ன சம்பல் சிக்கன் என்று நீங்கள் கேட்கலாம். இந்த சம்பல் சிக்கன் ஒரு பிரபலமான மலேசியன் ரெசிபி. இதன் ஸ்பெஷலே ஒரு சாஸில் சிக்கனை வேக வைப்பது தான். இதை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.

உங்களுக்கு சம்பல் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சம்பல் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சம்பல் செய்வதற்கு...
* சின்ன வெங்காயம் - 10
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 10 முதல் 15
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* லெமன் கிராஸ் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* நாட்டுச் சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* புளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/4 கப்
சிக்கன் சம்பல் செய்வதற்கு...
* சம்பல் - 1 கப்
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* தேங்காய் பால் - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப் (வறுத்தது)
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* லெமன் கிராஸ் - 2
* எலுமிச்சை இலைகள் - 2
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் புளி பேஸ்ட் மற்றும் நாட்டுச் சர்க்கரையைத் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சம்பல் ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கி குளிர வைத்து ஜாரில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது சம்பல் சிக்கன் எப்படி செய்வதென்று காண்போம்.
* முதலில் ஒரு கப் சம்பலை ஒரு கடாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மசாலா பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
* பிறகு சிக்கனை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், தேங்காய் பால் சேர்த்து கிளறி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்த தேங்காயை சேர்த்து கிளறி, மீண்டும் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால், சுவையான சம்பல் சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications