Latest Updates
-
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சர்க்கரை பொங்கலை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. நொடியில் காலியாகும்..
Sakkarai Pongal Recipe In Tamil: பொங்கல் பண்டிகையன்று முதன்முதலாக உங்கள் வீட்டில் பானையில் பொங்கல் வைக்கப் போகிறீர்களா? ஆனால் சரியான அளவுகள் எதுவும் தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளவாறு பானையில் பொங்கல் வையுங்கள்.
இந்த அளவுகளில் பொங்கல் வைக்கும் போது, அதன் சுவை மிகவும் பிரமாதமாக இருப்பதோடு, சட்டென்று பொங்கலும் காலியாகிவிடும். அதுவும் இந்த முறையானது தமிழ் பாரம்பரிய முறைப்படி செய்யக்கூடியது. இதுவரை குக்கரில் பொங்கலை செய்திருந்தால், இந்த மாதிரி பொங்கல் செய்யுங்கள். இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.

உங்களுக்கு சர்க்கரை பொங்கலை பானையில் எப்படி சரியான அளவுகளுடன் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரை பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - 1 கப்
* பொடித்த வெல்லம் - 2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 3 (பொடித்தது)
* ஜாதிக்காய் - 1/2 சிட்டிகை
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ப்ரை செய்வதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* உலர் திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சரிசியை போட்டு, அத்துடன்
கடலைப் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, நீரை ஊற்றி ஒருமுறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் நீரை ஊற்றி, குறைந்தது 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, பொங்கல் வைக்கும் பானையில் 1 கப் காய்ச்சாத
பாலை ஊற்றி, அத்துடன் அரிசி ஊற வைத்த நீரை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
பொங்கல் வைக்கும் பானையில் நீரானது 3/4 அளவு இருக்க வேண்டும். அப்போது
தான் பொங்கல் நன்கு குலைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
* பின்பு அந்த பொங்கல் பானையை அடுப்பில் வைத்து, பொங்கல் நன்கு
பொங்கியதும், மிதமான தீயில் வைத்து, பின் அதில் ஊற வைத்துள்ள
பச்சரிசியை சேர்த்து உடனே நன்கு கிளறி விட வேண்டும். இல்லாவிட்டால்
அரிசி அடியில் ஒட்டிக் கொள்ளும். இப்படி அடிக்கடி அரிசியை கிளறி
விட்டு 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அரிசி நன்கு வெந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்ததும், அதில்
துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், ஜாதிக்காய் மற்றும் நெய் சேர்த்து
நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து
நன்கு பொன்னிறமாக பொரிந்து வத்தும், அதை பொங்களுடன் சேர்த்து நன்கு
கிளறினால், சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
