Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற சைவ கெட்டி சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Saiva Getti Salna Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரி தான் குருமா, கிரேவி செய்வீர்களா? சற்று வித்தியாசமாக, அதுவும் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சைடு டிஷ்ஷை வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சைவ கெட்டி சால்னாவை செய்யுங்கள். இந்த சால்னா மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு சைவ கெட்டி சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ கெட்டி சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6
சால்னாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கறி மசாலா தூள்/ கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுடுநீரில் கசகசா மற்றும் முந்திரியைப் போட்டு, 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மிக்சரி ஜாரில் தேங்காய், சோம்பு, சின்ன
வெங்காயம் மற்றும் ஊற வைத்துள்ள கசகசா, முந்திரியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து,
1 டீஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு 5 நிமிடம்
மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு
இறக்கினால், சுவையான சைவ கெட்டி சால்னா தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
