Latest Updates
-
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ரோட்டுக்கடை எக் ரைஸ் ரெசிபி - செஞ்சு பாருங்க, காரசாரமா அட்டகாசமா இருக்கும்
Rottukadai Egg Rice Recipe in Tamil: எக் ரைஸ் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். நம் ஊரில் சாலைகளில் எவ்வளவு ப்ரைடு ரைஸ் கடைகள் இருந்தாலும் அனைத்திலும் கூட்டம் நிறைந்திருக்கும். என்னதான் பெரிய பெரிய ஹோட்டல்களில் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டாலும் ரோட்டுக்கடையில் சாப்பிடும் ப்ரைடு ரைஸின் சுவை என்பது மிகவும் தனித்துவமானதாகும்.

ரோட்டுக்கடை முட்டை சாதத்தை வீட்டிலேயே மிகவும் எளிதாக செய்யலாம். மதியம் செய்த சாதம் மிச்சமிருந்தாலும் சரி, ப்ரெஷாக சாதம் வடித்தாலும் சரி நீங்கள் விரும்பினால் இந்த அட்டகாசமான முட்டை சாதத்தை வீட்டிலேயே செய்யலாம். இந்த முட்டை சாதத்தை இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு மத்திய உணவாகவும் கொடுத்தனுப்பலாம்.
உங்களுக்கு ரோட்டுக்கடை முட்டை ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை முட்டை ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சாதம் வேக வைக்க:
- அரிசி - 1 கப்
- தேவையான அளவு - தண்ணீர்
- உப்பு - அரை ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
முட்டையை சமைக்க:
- முட்டை - 5
- மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
எக் ரைஸ் செய்ய:
- நெய் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
- இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சிறிது நறுக்கிய கொத்தமல்லி
- மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
செய்முறை:
- அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அரிசி ஊரும் போது முட்டைகளை உடைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு அடித்துத் தயார் நிலையில் வைக்கவும்.
- அரிசியை ஊறவைத்த பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அது கொதித்ததும், உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- ஊறவைத்த அரிசியை அதில் போட்டு, 90% வேகும் வரை சமைத்து, தண்ணீரை வடித்து ஆறவிடவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து, வெண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடாக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும்.
- பச்சை வாசனை போனதும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- நன்றாக வதக்கிய பிறகு, அடி பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். இப்போது கிரேவிக்குத் தேவையான உப்பைச் சேர்க்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் சோயா சாஸை சேர்க்கவும். பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டையை சேர்க்கவும்.
- முட்டை பொரியத் தொடங்கியதும் நன்கு கிளறவும். பின்னர் நீரை வடித்து வைத்துள்ள சமைத்த சாதத்தைச் சேர்க்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிய பின் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூடான ரோட்டுக்கடை எக் ரைஸ் ரெடி. சூடாக சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications