ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Rottukadai Chicken 65 Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் எப்போது வாங்கினாலும் அதைக் கொண்டு சிக்கன் 65 செய்வீர்களா? நீங்கள் செய்யும் சிக்கன் 65 எப்போதும் மசாலா உதிர்ந்து வருமா? அதோடு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் சிக்கன் 65 செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரோட்டுக்கடை சிக்கன் 65 என்றால் ரொம்ப பிடிக்குமா? அந்த சுவையில் 65 செய்ய நினைக்கிறீர்களா?

Rottukadai Chicken 65 How To Make Street Style Chicken 65 Recipe

அப்படியானால் அந்த சுவையில் 65 செய்ய ஒருசில மசாலா பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி சிக்கனை நன்கு ஊற வைக்கும் போது, சிக்கன் மென்மையாக இருப்பதோடு, மசாலா அனைத்தும் சிக்கனில் இறங்கியிருக்கும்.

உங்களுக்கு இந்த ரோட்டுக்கடை சிக்கன் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் - 400 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் தயிர், பாதி எலுமிச்சையின் சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சோள மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால், சுவையான ரோட்டுக்கடை சிக்கன் 65 தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 1, 2026, 15:12 [IST]
Desktop Bottom Promotion