Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
அரிசி பக்கோடா
உங்கள் வீட்டில் சாதம் மற்றும் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு போன்ற ஏதேனும் காய்கறிகள் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு ருசியான பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடாவின் பெயர் அரிசி பக்கோடா.
மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது பலருக்கும் சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். உங்களுக்கும் அப்படி தோன்றினால், உங்கள் வீட்டில் சாதம் மற்றும் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு போன்ற ஏதேனும் காய்கறிகள் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு ருசியான பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடாவின் பெயர் அரிசி பக்கோடா. இந்த அரிசி பக்கோடா நீங்கள் சாப்பிட்ட மற்ற பக்கோடாக்களைப் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
9 வருடமாக அவதிப்படும் சிறுமி.. ஆபரேஷன் செய்ய உதவுங்கள்!

உங்களுக்கு அரிசி பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 3/4 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காலிஃப்ளவர் - 1/4 கப்
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பௌலில் சாதத்தைப் போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் கடலை மாவு, சோள மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது மற்றும் மற்ற பொருட்களையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து, அடுப்பில் சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
குறிப்பு:
* இந்த பக்கோடாவிற்கு முட்டைக்கோஸ், குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
* இந்த பக்கோடாவை தயாரித்த உடனேயே சாப்பிட்டால் தான் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
* உங்களுக்கு வேண்டுமானால் இத்துடன் ஒரு சிட்டிகை சமையல் சோடாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
