Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
தோசை மாவு இல்லையா? 1 கப் அரிசி மாவு இருந்தா 10 நிமிடத்தில் இப்படியொரு தோசையை செய்யுங்க...
Rice Flour Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? என்ன காலை உணவு செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சரிசி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சரிசி மாவைக் கொண்டு அட்டகாசமான சுவையில் மொறுமொறுவென்று தோசை சுடுங்கள்.
இந்த அரிசி மாவு தோசை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அனைத்து சட்னியுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த தோசை 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு அரிசி மாவு தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி மாவு/இடியாப்ப மாவு - 1 கப்
* தண்ணீர் - 2 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சிறிய கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 2 1/4 கப்
நீரை ஊற்றி, இரண்டு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து
கலந்து, மூடி வைத்து ஒரு 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், சீரகம்,
மிளகு மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை
கரண்டியால் நன்கு கிளறி, பின் தோசைக் கல்லில் சுற்றி ஊற்ற வேண்டும்.
இந்த தோசையை வழக்கமாக சுடும் தோசை போன்று சுட முடியாது. ரவா தோசை
போன்று தான் சுட முடியும். தோசையை ஊற்றிய பின், சுற்றி எண்ணெய் ஊற்றி,
மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக மாறியதும், அப்படியே மடித்து
எடுத்தால், சுவையான அரிசி மாவு தோசை தயார்.
Image Courtesy: F For Flavour



Click it and Unblock the Notifications
