Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.... ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்வது எப்படி?
Restaurant Style Chilli Panner: கோடை விடுமுறை முடிந்து, குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துவிட்டன. மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை ஆற்றும் வகையில் ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் ரெசிபி நிச்சயம் குழந்தைகளின் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சுவையாக இருப்பதோடு தவிர, பசியையும் தணிக்கும். மேலும் இது செய்வது மிகவும் சுலபம். 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (இரண்டாக வெட்டியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
* ரெட் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பன்னீர் கோட்டிங்கிற்கு...
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 6 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 கப் (பொரிப்பதற்கு)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பௌலில் கோட்டிங்கிற்கு கொடுத்துள்ள
பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி பஜ்ஜி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, கலந்து
வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ்,
க்ரீன் சில்லி சாஸ், வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி,
மிளகாய் தூள் மற்றும் ஒன்றாக கலந்து வைத்துள்ள சாஸ்களை சேர்த்து
கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளற
வேண்டும். உங்களுக்கு ட்ரையாக வேண்டுமானால், நீர் வற்றும் வரை கிளற
வேண்டும். அதுவே கிரேவியாக வேண்டுமானால், சற்று நீராக இருக்கும் போதே
இறக்கி, மேலே ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து கிளறினால், சுவையான
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
