Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும்
Raw Mango Rasam Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரசம் ரொம்ப பிடிக்குமா? அடிக்குற வெயிலுக்கு அடிக்கடி உங்கள் வீட்டில் ரசம் தான் செய்வீர்களா? கோடையில் பெரும்பாலான நாட்களில் மதிய வேளையில் ரசம் வைத்து சமையலை முடித்துவிடுவீர்களா? வெயில் காலம் என்றாலே மாங்காய் சீசன்தான், எனவே மாங்காயை வைத்து ஒருமுறை மாங்காய் ரசம் செய்யுங்கள். இந்த மாங்காய் ரசமானது கோடையில் சாப்பிட மிகவும் ஏற்றதாகும், மேலும் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

முக்கியமாக இந்த ரசம் செய்வது மிகவும் சுலபமாகும். இந்த மாங்காய் ரசத்தை பல வழிகளில் செய்வார்கள். பொதுவாக ரசம் என்றாலே மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான். அதிலும் இந்த ரசம் மாங்காய் வைத்து செய்யப்படுவதால் இதன் ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் அதிகமாகும். மாங்காய் இந்த சீசனில் மட்டுமே கிடைக்குமென்பதால் இப்போதே இந்த ரசத்தை செய்து பார்த்து விடுங்கள். டக்குனு சமையலை முடிக்க விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.
உங்களுக்கு சூப்பரான மாங்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பச்சை மாங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 3 ஸ்பூன் தேங்காய்
- தேவையான அளவு தண்ணீர்
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 வர மிளகாய்
செய்முறை:
- மாங்காயின் தோலை உரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- மாங்காய், பச்சை மிளகாய், உப்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
.- 2 கப் நீரைப் பயன்படுத்தி அரைத்த கலவையை நன்றாக வடிகட்டவும்.
- ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும், பருப்பு பொன்னிறமாக மாறியதும், இந்த வடிகட்டி வைத்த மாங்காய் நீரில் சேர்க்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இந்த கலவையை 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- நுரை வருவதற்கு முன் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சூப்பரான மாங்காய் ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications
