Just In
- 19 min ago
இந்த சைவ உணவுகளால் உங்கள் ஆயுள் குறையும் ஆபத்து அதிகரிக்கிறதாம்... ஜாக்கிரதையா சாப்பிடுங்க...!
- 36 min ago
பெண்களே! உங்க கணவன் ரொம்ப சந்தோஷமா இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகளை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது கோமாவுக்கே கொண்டு போயிடும்..
- 1 hr ago
இஞ்சி சாப்பிடுவது என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்தும் தெரியுமா?யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது தெரியுமா?
Don't Miss
- News
கோலாகல கருணாநிதி சிலைத் திறப்பு விழா: ரஜினிகாந்த் உட்பட.. பங்கேற்ற விஐபிகள் யார் யார் தெரியுமா?
- Automobiles
விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?
- Sports
"யாருப்பா நீ விநோதமா பண்ற" விராட் கோலிக்காக ரசிகர் செய்த விஷயம்.. இதை சரியா கவனிச்சீங்களா??
- Movies
கோபியை வெளியில் துரத்திய ராதிகா... புலம்பலில் கோபி.. அடுத்தடுத்த ட்விஸ்ட்டில் பாக்கியலட்சுமி தொடர்
- Technology
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- Finance
இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம்: பேச்சுவார்த்தையை தொடங்கியது கூகுள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரவா பணியாரம்
மாலை வேளையில் நல்ல சுவையான ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையாக உள்ளதா? என்ன செய்து சாப்பிடுவது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இனிப்பாக சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் ரவா இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான பணியாரம் செய்து கொடுங்கள். இந்த பணியாரம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு ரவா பணியாரம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவா - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 1/2 கப்
* மைதா - 1/4 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அதில் அரை கப் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப்போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான ரவா பணியாரம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi