Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
1 கப் ரவை இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..
Rava Masala Adai Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை இருந்தால், அந்த ரவையைக் கொண்டு காய்கறிகளை சேர்த்து அருமையான சுவையில் மசாலா அடை தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த அடை தோசை சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிட மறுப்பவரானால், அவர்களுக்கு இப்படி காய்கறிகளை சேர்த்து அடை தோசை செய்து கொடுங்கள். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரவா மசாலா அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா மசாலா அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
அடைக்கு...
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
மேலே தூவுவதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அத்துடன் ரவை மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ரவையை கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து,
பின் துருவிய கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, ஆப்ப
சோடா, கொத்தமல்லியை சேர்த்து நன்கு அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குழம்பு
மிளகாய் தூள், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து
கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள அடை மாவை எடுத்து தோசை போன்று ஊற்றி, மேலே மிளகாய் தூள்
கலந்து வைத்துள்ள வெங்காயத்தை சிறிது தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா மசாலா அடை
தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications