Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
ரவையும், தேங்காயும் இருந்தா இப்படியொரு டிபன் செஞ்சு பாருங்க... அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...
Rava Coconut Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் டிபனாக இருக்குமா? ஆனால் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? வீட்டில் ரவை உள்ளதா? அத்துடன் தேங்காயும் இருந்தால், அந்த இரண்டு பொருட்களுடன் ஒருசில பொருட்களை சேர்த்து தோசை செய்யுங்கள்.
இந்த ரவா தேங்காய் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த தோசையானது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ருசியாக இருக்கும். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, குருமா என்று அனைத்துமே பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு ரவா தேங்காய் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா தேங்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சின்ன வெங்காயம் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* துருவிய கேரட் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ரவை, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம்,
சீரகம், உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, கெட்டியாக இருந்தால்,
சிறிது நீரை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லை
சூடேற்ற வேண்டும்.
* கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி,
சற்று மொத்தமாக தோசையை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட்டை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், ரவா தேங்காய் தோசை தயார்.
Image Courtesy: Vegetable Platter



Click it and Unblock the Notifications
