ரவையும், தேங்காயும் இருந்தா இப்படியொரு டிபன் செஞ்சு பாருங்க... அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...

Posted By:

Rava Coconut Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் டிபனாக இருக்குமா? ஆனால் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? வீட்டில் ரவை உள்ளதா? அத்துடன் தேங்காயும் இருந்தால், அந்த இரண்டு பொருட்களுடன் ஒருசில பொருட்களை சேர்த்து தோசை செய்யுங்கள்.

இந்த ரவா தேங்காய் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த தோசையானது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ருசியாக இருக்கும். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, குருமா என்று அனைத்துமே பொருத்தமாக இருக்கும்.

Rava Coconut Dosa How To Make a Rava Coconut Dosa Recipe

உங்களுக்கு ரவா தேங்காய் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா தேங்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சின்ன வெங்காயம் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* துருவிய கேரட் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் ரவை, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லை சூடேற்ற வேண்டும்.
* கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி, சற்று மொத்தமாக தோசையை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட்டை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ரவா தேங்காய் தோசை தயார்.

Image Courtesy: Vegetable Platter

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 11, 2024, 22:04 [IST]
Desktop Bottom Promotion