Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Rava Appam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு பசியை ஆற்றும் வகையிலும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் 15 நிமிடத்தில் சட்டென்று ஒரு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் ரவா உள்ளதா?

அப்படியானால் அந்த ரவையுடன், கோதுமை மாவை சேர்த்து அப்பம் செய்து கொடுங்கள். இந்த அப்பம் ருசியாக இருப்பதோடு, 2 நாட்கள் வரை வைத்தும் சாப்பிடலாம். ஒருமுறை இந்த ஸ்நாக்ஸை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.
உங்களுக்கு இந்த ரவா அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* ரவை - 1 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் பொடித்த வெல்லம் மற்றும் 1/2
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 1/2 கப் கோதுமை மாவு, உப்பு,
ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் வெல்ல நீர் ஓரளவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்
போதே வடிகட்டி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, 15 நிமிடம்
மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து, அதில் தோசை மாவு பதத்திற்கு தேவையான
அளவு நீரை ஊற்றி, ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டி மாவை எண்ணெயில் ஊற்றி,
மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான ரவா அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications
